மீண்டும் ஒரு குண்டு இன்று வெடித்துள்ளதாக கூறப்படுகிறது இக் குண்டு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்கு அருகில் வெடித்துள்ளதாக காவல்த்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவது, கை விடப்பட்ட நிலையில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த வாகனம் ஒன்றை சோதனையிட்டதாகவும் அதற்குள் வெடிக்காத நிலையில் ஒரு வெடிபொருள் இருந்ததாகவும் தெரியவருகிறது. அக் குண்டை காவல்த்துறையின் வெடிபொருள் செயலிழக்க வைக்கும் பிரிவு மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றி விட்டு செயலிழக்க வைக்க முயன்ற போதே அது வெடித்ததாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அறியப்படுகிறது.