முல்லைத்தீவு அளம்பில் உப்புமாவெளி பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்றில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது படையினரின் உபகரணங்கள் ஒருதொகுதி படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (01.05.19) காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவினர் அளம்பில் பகுதியில் உள்ள தனியார் கோட்டல் ஒன்றில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது தொலைத்தொடர்பு கருவி உள்ளிட்ட படைய பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

அளம்பில் உப்புமாவெளி பகுதியில் இயங்கிவந்த தனியார் ஹோட்டல் ஒன்று படையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி பாவனைக்கு உட்படுத்திய பொருட்களை படையினர் மீட்டுள்ளார்கள்.

இதன்போது இராணுவ சப்பாத்து 2சோடி, கமோ சீருடை1, ஜக்கட் ஒன்று, தொலைபேசி சிம் மூன்று, கத்தி ஒன்று, தொலைநோக்கி கருவி ஒன்று, தொலைத்தொடர்பு கருவிகள் 9 என்பன படையினரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஹொட்டலில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயன்படுத்தும் உபகரணங்களே இவை என அறிய முடிகின்றது .

முல்லைத்தீவு பொலீசார் மேலதிக நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக தெரிவித்துள்ளார்கள்.

புகைப்படங்கள் : குமணன்