2009 ஆம் ஆண்டு சிங்கள வல்லாதிக்க அரசும் சர்வதேச வல்லரசுகளும் இணைந்து பூலோக அரசியல் இலாபங்களுக்காக ஒரு இனத்தையே அழித்தெறிந்த வரலாற்றை தாங்கிய மண் முள்ளிவாய்க்கால்.

அந்த வலிகளை சுமந்து, அம் மண்ணில் வாழ்ந்து இன்றும் வெறும் சடங்களாக வாழும் சாட்சியங்களின் தொகுப்பாக “ முள்ளிவாய்க்கால்” – இனவழிப்பின் 10 ஆண்டு என்ற புத்தகம் வெளிவர இருக்கின்றது. இப்புத்தகத்தை கடற்சூரியன் வெளியிடுகிறது. “ sunsea” கப்பலில் கனடாவுக்கு புலம்பெயர்ந்து வந்த இளையவர்கள் சிலர் சேர்ந்து அக்கப்பலின் நினைவோடு தாம் முள்ளிவாய்க்காலில் பட்டு வந்த துன்பங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற பெரும் முயற்சியாக உருவாக்கி உள்ளார்கள்.

வரும் 12.05.2018 அன்று st. mother theresa catholic academy, 40 Sewells Rd, Scarborough, ON M1B3G5. என்ற முகவரியில் 15 – 17 மணிக்கு வெளியிடப்பட இருக்கின்றது. இந் நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறைக்காக இவ்விளையவர்கள் செய்யும் உன்னத பணிக்கு வலுச் சேர்க்குமாறு வேண்டுகிறோம்.