வரும் 18 ஆம் நாள் ஈழத்தமிழர்களுக்கு மிக முக்கியமான ஒரு நாள். யாராலும் சாதாரணமாக கடந்துவிடவோ மறந்து விடவோ முடியாத துயரம் நிறைந்த நாள். முள்ளிவாய்க்கால் எனும் பேரவலம் நிகழ்த்து முடிக்கப்பட்டு 10 ஆவது வருடத்தை கடந்து கொண்டுருக்கும் இந்த நிலையில் அந்த நாளில் தாயகத்தில் நடக்க இருக்கும் பிரதான நிகழ்வுகளைக் குழப்பும் வகையில் சில சக்த்திகள் இயங்கி வருகின்றமை கண்ணூடு இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது தொடர்பான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பினை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகளின் உணர்வுக்கு மதிப்பளித்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கடந்த காலங்களில் அரசாங்கம் எவ்வித ஏற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் கண்காணிப்பதற்கு முழுமையான நேரத்தை செலவிட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து எழுந்த சாதாரண விடயங்களையும் பொருட்படுத்தாமல் செயற்பட்டதன் விளைவே இன்று பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.