பள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே  முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைத்தூக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் இதுவரை முறையான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குண்டுத் தாக்குதலுக்கு இலங்கான தேவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு சீயோன் தேவாலத்திற்கு நேற்று அதுரலிய ரத்தன தேரர் விஜயம் செய்திருந்தார்.

இதனையடுத்து தேரர் உள்ளிட்ட குழுவினர், மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அதுரலிய ரத்தன் தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.