உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவு அணியின் பந்துவீச்சாளர்களின் மிரட்டலான பந்துவீச்சுக்கு அடிபணிந்த பாகிஸ்தான்இ 7 விக்கெட்டுகளால் படுதோல்வியடைந்தது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதியிருந்தன. நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. தலைவர் ஹோல்டரின் இந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் திணறினர்.

இதனால், 21.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 105 ஓட்டங்களில் சுருண்டது.

106 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பம் முதல் அதிரடியாக துடுப்பெடுத்தாடி  13.4 ஆவது ஓவரில்  மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை பெற்று 7 விக்கெற்றுகளால் வெற்றியடைந்தது.


மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக, அதிரடியாக ஆடிய கிரிஸ் கெயில் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு நிக்கோலஸ் பூரன் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் மிரட்டி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒஷென் தோமஸ் தெரிவுசெய்யப்பட்டார்.