முள்ளிவாய்க்காலில் செய்யப்பட்ட இனவழிப்பின் 10 ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வு கனடா, வன்கூவரிலிலும் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பாக எமது செய்தியாளர் தெரிவிக்கையில், வன்கூவர் நேரப்படி 18.05.2019 அன்று மாலை 05 மணியளவில்
“ வன்கூவர் கலையரங்கத்துக்கு” முன்றலில் தாயக உணர்வாளர்கள் பெருந்தொகையினர் கூடியிருந்தனர். அது மட்டுமல்லாது கனேடிய மண்ணின், வன்கூவர் Kingsway பாராளுமன்ற உறுப்பினரான Don Davies சமூகமளித்திருந்தார். Mr. Don Davies மெழுகுவர்த்தி ஏற்றி அகவணக்கம் செலுத்தி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதைத்தொடர்ந்து ஆங்கில மொழியில் சிறு கருத்துரை ஒன்றையும் தந்தார். சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலைகள் பற்றியும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றியும் உரையாற்றியிருந்தார். இப்படியான மனித உரிமை மீறல் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கான தகுந்த நீதி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் பிரிட்டிஷ் கொலம்பியா MLA
Maple Elmore அவர்களும் வருகை தந்திருந்தார்.
இவரும் தமிழ் மக்களுக்கு நடந்த, நடந்து கொண்டிருக்கும் அநியாயங்கள் பற்றியும், அவர் களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் எடுத்திருந்தார். மேலும் Legislative Assembly சார்பில் ஒரு சான்றிதழ் வழங்கியிருந்தார்.
இளம் தமிழ் தலைமுறையை சந்தித்து அவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு கருத்தரங்கு நடத்த வேண்டுமெனவும் அமைப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து இந்நிகழ்வில்…
நமது இளய தலைமுறையினரும் தாம் தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைகள் பற்றி தமக்கு தெரிந்தவற்றை, அறிந்தவற்றை பகிர்ந்ததோடு மட்டுமல்லாது, எதிர்காலத்தில் நாங்கள் இதை உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இறுதியாக, அனைவரும் மெழுகுவர்த்திகள் ஏற்றி அமைதிவணக்கத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.