இந்தியப் பிரதமருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்திப்பு ஹைதராபாத் ஹவுசில் இன்று காலை இடம்பெற்றது. அத்தோடு இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் மாத்திரமே நடைபெற்றது. இதன்போதே இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.