யாழ். நகர் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவுப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று பிற்பகல் இந்த சோதனை நடத்தியிருந்த நிலையில் குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர்கள், சீ-4 வெடி மருந்து உட்பட்ட அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

அதில், 98 டெட்டனேட்டர்கள், 12 கிலோ சி-4 வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் என்பன கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.