தமிழீழத் தேசியத் தலைவரின் புகைப்படங்கள் மற்றும் மாவீரர்களின் நிழற்படங்களை வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றூண்டிச்சாலை நடத்துனர் ஆகியோர் சட்டமா அதிபரின் பரிந்துரையின் பெயரில் தலா 100000 ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே நேரம் நேற்று நடந்த மாணவர் போராட்டத்தின் போது மக்களை அழித்த தீவிரவாதயோடு சேர்ந்து படம் எடுத்த முஸ்லீம் இளைஞர்கள் உத்தமர்கள் எம் இனத்திற்காக உழைத்த தலைவரின் படத்தை வைத்திருந்தால் பயங்கரவாதியா என்று மாணவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையிலும் மாணவர்களை நிபந்தனையற்று விடுதலை செய்யாது, பிணையில் விடுதலை செய்திருப்பதாவது தொடர்ந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை பீதியில் வைத்திருந்து மக்களுக்கான விடியல் செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுப்பதற்கே என்று மாணவர்கள் கருதுகிறார்கள்.