போர்க்குற்றவாளி பிரசன்ன டி சில்வா வெள்ளை வான் கடத்தல் காரர்களுக்கு ஆயதங்கள் வழங்கி எமது உறவுகளை காணமல் ஆக்கச்செய்ததலில் பெரும் பங்காளி.

கிழக்குமாகணத்தை ஆக்கிரமிக்கும் சிங்கள பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை லெப்ரினன்ட் கேணலாக வழிநின்று நடத்தியவன். அதன் பின் 55வது காலட்படை கட்டளை தளபதியாக பொறுப்பேற்று வன்னிப்பெருநிலப்பரப்பபை ஆக்கிரமித்து எமது மக்களை அழித்த இனவழிப்பு யுத்ததில் வடபோர்களமுனையின் முன்நகர்வுக்கான கட்டளைத்தளபதியாக இருந்தவன்.

நாகர்கோவில் முதல் முல்லைத்தீவு வரையான அனைத்து இனவழிப்பு நடவடிக்கைகளுக்கும் கட்டளைத்தளபதியாக இருந்தவனும் இந்த பிரசன்னவே இறுதியாக 59 டிவிசன் காலட்படையை கொண்டு வட்டுவாகல் பாலத்தை கைப்பற்றி இறுதிப்போரில் நடந்த இனவழிப்பு போர்குற்ற சம்பவங்களுக்கு காரணமாக இருந்தவனும் இந்த பிரசன்னவே எம்மினத்தை அழிப்பதில் திறமைசாலியாகையால் வெறும் மூன்று வருடத்தில் மேஜர் செனரலாக பதவி உயர்வு பெறுகிறான்.

இன்று இந்த போர்க்குற்றவாளியால் பாலச்சந்திரன் உட்பட என் நண்பர்கள் பலர் என்னுடன் இல்லை அவர்கள் இருந்திருந்தால் அவர்களுக்கு இப்போது 25 வயது இருந்திருக்கும் அவர்களும் யொகானி போல் உலகப்புகழ்பெற்றிருக்க கூடும். ஆனாலும் என்ன அவர்களில் சிலர் 13 வயது இருக்கும் போதே கொல்லப்பட்டு விட்டனர் இன்னும் சிலர் காணமல் ஆக்கப்பட்டு விட்டனர். இவற்றுக்கெல்லாம் காரணமானவர்களில் ஒருவரின் மகள் உலகப்புகழ் பெறுகிறாள் இவற்றை எல்லாமே இழந்த நாமும் எதையும் அறியாமல் காவித்திரிகிறோம்.

சிறிலங்காவின் சிறுவர் தினமான இன்று(01.10) நானும் என் நண்பர்களுக்காக அழுது கொள்கிறேன்….

நினைவோடு தவபாலன் திருநிலவன்.