வட மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுனவர்த்தன தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். காங்கேசன்துறையில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அலுவலகத்தில் பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையுடன் ரவி விஜயகுனவர்த்தன இன்று அழைத்து வரப்பட்டார்.