அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உட்படுத்திய ஊடகர் விக்கிலீக்ஸ் இணை இயக்குனர் ஜூலியன் அசான்ஜ் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் அமரிக்காவின் பல உயர் இரகசியங்களை வெளியிட்டு உலக நாடுகளையே அதிர வைத்தவர். அதன் பின்னான காலத்தில் வேறு நாடுகளில் சரண் புகுந்து வாழ்ந்து வந்தார். ஆனால் கடந்த மாதம் லண்டனில் வைத்து கைதாகி இருந்தார். இப்போது அவருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளதாக அறிய முடிகிறது.

7 ஆண்டுகளுக்கு முன் லண்டன் ஈக்குவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்த விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் பிணை நிபந்தனைகளை மீறியமையினால் லண்டன் நீதிமன்றம் அவருக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.