ஹிந்தி மொழியினை தமிழகத்தில் திணிக்க முற்பட்டால், மீண்டும் மொழி போராட்டம் வெடிக்குமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஹிந்தி மொழியை கற்பதனாலேயே அறிவு வளரும் என்றால் ஒன்றரை கோடி மக்கள் ஏன் இன்னும் நிலத்தையே நம்பி வேலைசெய்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் எந்த மொழியையும் கற்பதற்கு உரிமையுண்டு. அதற்காக குறித்த ஒரு மொழியை கற்க வேண்டுமென திணிக்ககூடாது.

அவ்வாறு செய்தால் முன்னைய காலங்களில் இடம்பெற்ற மொழி போராட்டம் மீண்டும் தோன்றுவதற்கு வாய்ப்புள்ளது.