உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியின், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 136 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியுசிலாந்து அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, நியுசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 136 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், குசால் ஜனித் பேரேரா 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

பந்து வீச்சில் Henry 03 விக்கெட்டுகளையும், Ferguson 03 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.