ஒரு வருடத்தில் நான்கு மாதங்கள் அல்லது நான்கு தடவைகள் நினைவு கூரப்படும் ஒரு மாபெரும் வீரன் பிரிகேடியர் பால்ராஜ்!(Man of valour)

காரணம் உலக இராணுவ விற்பன்னர்களால் விந்தை இதுவென வியந்துரைக்கப்படும் குடாரப்பு தரையிறக்கம் பங்குனி மாதம் 26 தேதி இவரது தலைமையில் நடைபெற்றது.

பங்குனி*: முதலாவதாக பங்குனி மாதத்தில் மக்கள் இவரை நெஞ்சிருத்துகின்றனர்.

சித்திரை*:அடுத்து ஆனையிறவு வெற்றிநாள் கொண்டாடப்படும் போது சித்திரை மாதத்தில் நெஞ்சிருத்துகின்றனர்.

வைகாசி*: இந்த வீரன் வீரசொர்க்கம் எய்திய வைகாசி மாதம் 20 ஆம் தேதியில் மீண்டும் ஒரு முறை நெஞ்சிருத்துகின்றனர்.

கார்த்திகை*: இம் மாதம் தனியே மாவீரர் தினம் என்பதால் நினைவு கூரப்படுவதில்லை அதனையும் தாண்டி இந்த மாபெரும் வீரனின் பிறந்த தினமும் இதே நாளில்தான்.

வெள்ளை வெளிரென சிறகு விரிக்கும் கொக்குப் பூக்கள் அழகாய் மலரும் தமிழர்தம் “கொக்குத்தொடுவாய்”மண்ணில்
கந்தையா கண்ணகி தம்பதியினருக்கு 1964 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 ஆம் நாளில்தான் அவர்களது அருந்தவப் புதல்வனாய் அவதாரம் எடுத்தார்.

இந்த வீரன் தமிழ்வானம் உள்ளவரை #ஒளிவீசும்_தாரகையாய் ஒளிவீசி தமிழர் எமக்கு திசைகாட்டி வழிகாட்டுவார் என்பது என் எண்ணம் மட்டுமல்ல அதுவேதான் திண்ணம்

எழுதியது : தமிழீழ மருத்துவர் தணிகை

நாள்: 23.05.2021