ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுனர் இன்னும் இரண்டு வாரங்களில் பதில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமது விடுதலை தொடர்பில் நளினி முருகன் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போது, கடந்த திங்கட் கிழமை தமிழக அரசாங்கத்தின் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி இதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த 7 பேரையும் விடுவிப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானம் ஆளுனரிடம் கையளிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில், இன்னும் அதுகுறித்த நிலைப்பாட்டை ஆளுனர் அறிவிக்காதிருக்கிறார்.

இதன்படி 2 வாரங்களில் அவரது பதில் கிடைக்கும் என்றும், அதற்கு அமைய நீதிமன்றில் தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதாகவும் அரச சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதனை அடுத்து நீதிமன்றம் இந்த வழக்கினை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.