இலங்கையின் தலைநகரான கொழும்பின் பிரதான நகரங்களில் ஒன்றான வெள்ளவத்தை தொடருந்து நலையத்துக்கு அருகில் வைத்து கடற்படையினரால் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணம் செய்த முச்சக்கரவண்டியை மறித்த கடற்படை சோதனையிட்ட போது C4 என்று கூறப்படுகின்ற வெடிமருந்துகளை கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுது.

இந்த நிலையில் வாகனச் சோதனைகளில் ஈடுபட்ட சிங்கள கடற்படை அந்த மூவரையும் கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் யார்? எதற்காக அவ் வெடிமருந்துகளை கடத்தினார்கள்? எங்கே கொண்டு செல்கிறார்கள் என்ற விபரங்கள் தெரியவிரவில்லை என்றாலும், விசாரணை முடியும் போது அனைத்து விபரங்களும் வெளிவிடப்படும் என்று கூறப்படுகிறது.