அருளோவியம்
தமிழீழ மருத்துவக் கல்லூரியின் இரண்டாவது அணியில் மருத்துவராக கற்று தமிழீழத்தின் போராளி மருத்துவராக தனது வாழ்வை தமிழீழ விடியலுக்காக அர்ப்பணித்தவரின் நிழல்ப்படங்களைத் தாங்கிய பதிவு இது.
1632203551992856Download
இதுவும் ஓர் “துருவ நிதி”. (இ.இ.கவிமகனின் “பகிரப்படாத பக்கங்கள்” நூல் பற்றியது.)
தனிநபர்
நிதி,
வர்த்தக
நிதி,
பொது
நிதி என்று நிதியியலில்
பட்டியல் நீண்டாலும்,
தமிழ்நாட்டில்
"நிதி"
குடும்பத்தின்
நூதன ஊழல் நிதி நிலுவை பற்றிய
ஆச்சரிய வாய்ப்பிழப்புகள்
தொடர்ந்தாலும்,
இவை
எல்லாவற்றையும் விட இந்த
"துருவ
நிதி"
சற்று
வித்தியாசமானது.
அது
என்ன “துருவ
நிதி”?
பண்டைய
வட இந்தியாவின்,
கி.மு
மூன்றாம் நூற்றாண்டில்
மௌரியப்பேரரசின் தோற்றுவாய்க்கு
காரணமான கௌடில்யர் இயற்றியதாகச்
சொல்லப்படுகின்ற அர்த்தசாஸ்திரத்தில்
“துருவநிதி”
பற்றி இப்படிக் குறிப்பிடப்படுகிறது.
அதாவது
"ஆட்சிக்
குட்பட்ட நாட்டின் எல்லையோரம்,
பேராபத்துக்களில்
இருந்து காத்துக்கொள்ள
நிரந்தரமாக ஒரு...